
அவர் அளித்துள்ள பேட்டியென்றில், நான் நீண்ட நாட்களாக வெங்கட்பிரபுவை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு ஏற்றாற்போல மங்காத்தா கதை அமைந்தது. வெட்கட்பிரபு மிகவும் இனிமையான நண்பர். இந்த படத்தில் பணிபுரிந்திருக்கும் மற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது முழுத் திறமைகளையும் பயன்படுத்தி இந்தப் படம் சிறப்பான முறையில் தயாராக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் இதுவொரு முக்கியமான படம். என்னைப்பொறுத்தவரை மங்காத்தா பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், மங்காத்தா என் கனவு, என்று கூறியுள்ளார்.