Tuesday, May 03, 2011
அலைபாயுதே' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாதவன். அதன் பிறகு நிறைய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.அவரை 'ரன்' படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் லிங்குசாமி. அதனையடுத்து இந்தி, தமிழ் என மாறி மாறி படங்கள் நடித்து வந்தாலும் அவர் இதுவரை பொலிஸ் வேடத்தில் நடித்தது இல்லை.இப்போது மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் 'வேட்டை' படத்தில் நடித்து வருகிறார். மாதவனுடன் இணைந்து ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மாதவனுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியும், ஆர்யாவிற்கு ஜோடியாக அமலா பாலும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் முதன் முறையாக பொலிஸ் வேடத்தில் நடித்து வருகிறார் மாதவன். 'வேட்டை' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளிவர உள்ளது.
'வேட்டை' ஒரு அட்டகாசமான கதை. ரன் படம் வந்து எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வேட்டை படத்தின் மூலம் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறேன்.
ஆர்யா எனக்கு இனிய நண்பர். இப்படம் தெலுங்கில் எனது முதல் படமாக வெளிவர இருப்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது என்று மாதவன் கூறியுள்ளார்.