Monday, June 06, 2011
தெலுங்கு பாடிகார்ட் படம் தமிழில் விஜய் நடித்து ரிலீசான “காவலன்” படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் திரிஷாவை கவர்ச்சியாக நடிக்க வைக்க இயக்குனரும், தயாரிப்பாளரும் விரும்பினர். குறிப்பாக ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதனை திரிஷா ஏற்றுக் கொண்டு விட்டதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவியுள்ளது. இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடிக்கவில்லை. அது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மறுத்து ஒதுக்கினார். அப்படிப்பட்டவர் “பாடி கார்ட்” படத்தில் அரை குறை ஆடையில் நடிக்க சம்மதித்தது திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பிகினி உடையில் நடிப்பதற்கு திரிஷா நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மொத்த சம்பளத்துக்கு மேல் கூடுதலாக 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளாராம். அதாவது நீச்சல் உடையில் நடிக்க மட்டும் இந்த தொகை கேட்டுள்ளாராம். திரிஷா கேட்ட தொகையை வழங்க தயாரிப்பு தரப்பிலும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.