

அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. கடைசியாக நடித்த ராவணன், ரத்த சரித்திரம் படங்களில் சிறிய வேடங்களே கிடைத்தது. தற்போது தமிழ் படங்கள் அவர் கைவசம் இல்லை. இதனால் தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் படங்களில் இனிமேல் நடிக்க மாட்டீர்களா? என்று கேட்டபோது, நல்ல கதைகள் எதுவும் வரவில்லை என்று வருத்தத்தோடு சொன்னார். பொருத்தமான கதைகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் கூறினார்.
பிரியாமணி சமீபத்தில் தனது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாடினார். “ஷேத்திரம்” என்ற தெலுங்கு படத்தில் புராண கால கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, சரித்திர கால கேரக்டரில் நடிப்பது புது அனுபவமாக இருந்தது. என் திரையுலக வாழ்க்கையில் என்றும் நினைவில் நிற்கும் கேரக்டராக இது இருக்கும் என்றார்.