பொதுவாக அஜீத், விஜய் படங்கள் என்றால் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். அந்தவகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜீத், விஜய்யின் படங்கள் நேரடியாக மோத இருக்கின்றன. க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிப்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான "மங்காத்தா" படம், சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் "ஜெயம்" ராஜா இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் "வேலாயுதம்" படமும் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீசுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இருவரது படங்களும் முடிந்தாலும், நல்ல விளம்பரம், மார்க்கெட் உத்திகளைச் செய்த பிறகுதான் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். எனவே இருவரது படங்களையும் ஆகஸ்ட் மாதம் வெளியிடுகிறார்களாம். ஆனால் இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்தால் ரசிகர்களுக்குள் தேவையில்லாத மோதல்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால், ஒரு படத்தை ஆகஸ்ட் முதல்வாரத்திலும், இரண்டு வார இடைவெளி விட்டு மற்றொரு படத்தையும் வெளியிடப்போகிறார்களாம்.