
இந்நிலையில் "விஸ்வரூபம்" படத்தை ஆரம்பிக்காமல் இழுத்தடிப்பதாகவும், தான் தான் கொடுத்த கால்ஷீட் வீணாவதாகவும் கூறி படத்தின் நாயகி சோனாக்ஷி சின்ஹா விலகுவதாக அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் கமல் படத்தில் நடிக்க ரொம்ப ஆர்வம் காட்டியவர் சோனாக்ஷி தான், கமல் வயதில் பாதிகூட இல்லையே, அவருடன் எப்படி ஜோடி சேர்வீர்கள் என்று கேட்டபோது, காமிரா முன்னால் நின்றபிறகு நான் அதையெல்லாம் பார்ப்பதில்லை என்று கூறியவர், இப்போது என்னடானா...? படத்தை ஆரம்பிக்காமல் இழுத்தடிப்பதால், இந்தபடத்தை நம்பி மற்ற படங்களுக்கு என்னால் கால்ஷீட் தர முடியவில்லை, இதனால் நிறைய படவாய்ப்புகளை இழப்பதால் படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
சோனாக்ஷி விலகலையடுத்து விஸ்வரூபம் படத்தில், கமலுக்கு ஜோடியாக வேறு ஒரு நடிகையை தேடும் பணி நடந்து வருகிறது.