
Wednesday, July 13, 2011

எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் சென்னையில் ரிலீசாகி வசூல் குவிக்கின்றன. “நினைத்ததை முடிப்பவன்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “அடிமைப்பெண்”, “நாடோடி மன்னன்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “நேற்று இன்று நாளை”, “எங்க வீட்டுப்பிள்ளை” உள்ளிட்ட பல படங்கள் இங்கு தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
இதுபோல் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் எம்.ஜி.ஆரின் “அடிமைப் பெண்” படம் 11 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்துக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்தோடு திரண்டு வந்தனர்.
படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். கட்அவுட்டுகள், பேனர்கள் ரசிகர்கள் வைத்து இருந்தனர். ஆயிரம் மாலைகள் அணிவிக்கப்பட்ட பேனரும் வைத்திருந்தனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
படம் பார்க்க வந்தவர்களுக்கு பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.