Friday, 1 July 2011
சித்ராலயா கோபு சதாபிஷேக விழா.
Friday, July 01, 2011
காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, பாட்டி சொல்லை தட்டாதே உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் சித்ராலயா கோபு, காசேதான் கடவுளடா, அத்தையா மாமியா, வெள்ளை மனசு போன்ற படங்களை இயக்கியும் உள்ளார்.
சித்ராலயா கோபுவின் 80-வது பிறந்தநாள் சதாபிஷேக விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சிவக்குமார், கமலஹாசன், நடிகைகள் சரோஜாதேவி, காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, எம்.என். ராஜம், கவுதமி, டைரக்டர் பாலச்சந்தர், எழுத்தாளர் சோ, தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.