Friday, 1 July 2011
இலியானா சம்பளம் 50 லட்சமாக குறைப்பு.
Friday, July 01, 2011
பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் தமிழில் “நண்பன்” பெயரில் தயாராகும் “3 இடியட்ஸ்” இந்தி “ரீமேக்” படத்தில் நடித்து வருகிறார். இலியானா மற்ற நடிகைகளை விட கூடுதல் சம்பளம் வாங்குவதாக செய்தி வெளியானது.
ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வாங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அவரது சமீபத்திய படங்கள் சில தோல்வி படங்களாக அமைந்தன. இதனால் புதுப்பட வாய்ப்புகள் குறைந்தது.
தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனனும் இலியானா சம்பளத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி தனது புதுப்படத்தில் நடிக்க அவரை தேர்வு செய்ததை ரத்து செய்து விட்டார். வாய்ப்புகள் குறைந்ததால் இலியானா திடீரென்று மனம் மாறி உள்ளார். சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டாராம். 50 லட்சத்தில் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டுள்ளார்.