Friday, July 01, 2011
நடிகர் சிரஞ்சீவியின் ஓய்வு குறி்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அசிங்கமாக திட்டியுள்ளார்.நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன... மற்ற ரசிகர்கள் என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே? என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.
இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது: நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.
நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.
ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.
சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!