Friday, July 01, 2011
அஜீத்தின் பிறந்த நாளன்று மங்காத்தா படம் வெளியாகும் என்று பூஜை போடப்பட்ட அன்றே கூறி படத்தை தொடங்கினார் வெங்கட் பிரபு. வெங்கட்பிரபு தனது பேஸ்ஃபுக் மற்றும் டிவிட்டர் இணையத்தில் மங்காத்தா குறித்து பல்வேறு தகவல்களை கூறி வந்தார். அவரது பேஸ்ஃபுக் இணையத்தில் அஜீத்தின் ரசிகர்கள் எப்போது இசை வெளியீடு? எப்போது படம் வெளியீடு என்று கேட்டு வந்தாலும் படத்தின் இசை மற்றும் பட வெளியீடு தேதி எதுவும் கூறவில்லை.இந்நிலையில் இன்று காலை மங்காத்தா படம் குறித்து வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் கூறியிருப்பது " மங்காத்தா படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையாகும். ஆனால் அக்கதையிலும் சிறு சிறு காமெடி சீன்கள் இருக்கும். ஆனால் படம் கண்டிப்பாக வெகு சீரியஸான த்ரில்லர் படமாகும்.
அஜீத் இப்படத்தில் வித்தியசமாக இருப்பார். படத்தின் இரண்டரை மணி நேரமும் பரபரவென்று இருக்கும்.. இது இதுவரை வந்த தல படங்களை விட இது வித்யாசமான படமாக இருக்கும்.. தயாராக் இருங்கள் ! என்று கூறி இருக்கிறார்.
முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியீட பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறி வந்தவர் இன்று, "ஆகஸ்ட் 12 அல்லது 19 மங்காத்தா ஆட்டம் துவங்கும் என கூறி இருக்கிறார்.
மங்காத்தா பாடல் மற்றும் படம் வெளியாகும் நாள் எது என்று அஜீத் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.