
Monday, June 27, 2011

ஷங்கர் இயக்கததில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் படம் 'நண்பன்'. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வரும் நிலையில், ஷங்கரின் இயக்கம் குறித்து விஜய் பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தவர் ஷங்கர். இப்போது ஷங்கர் இந்தியாவின் முன்னணி இயக்குனர். ஷங்கர் படம் என்பதால் நண்பனில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக விஜய் நடித்து வருகிறார். தன்னுடைய சினிமா கேரியரில் 'நண்பன்' முக்கியமான படமாக இருக்கும் எனக் கூறிய விஜய், ஹாலிவுட் ஸ்டேண்ட்டர்டில் படமெடுக்கிறார் ஷங்கர் என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.