Thursday, April 21, 2011
அரங்கத்துக்கு அதிக வாடகை கேட்டதால், ஏ.ஆர்.ரகுமானின் டெல்லி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இசைப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டு அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்காக டெல்லி, பெங்களூரு, நாக்பூர் உள்ளிட்ட 5 நகரங்களை தேர்வு செய்தார். இசை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வந்தது.
டெல்லியில் அதிக கூட்டத்தை சமாளிக்கும் வகையிலும் போதிய வசதிகளுடனும் அரங்கங்கள் இல்லையாம். இதையும் மீறி மிகுந்த சிரமப்பட்டு சில இடங்களை தேர்வு செய்து வைத்திருந்தனர். அதிக வாடகை கேட்கப்பட்டதால் அந்த இடங்களையும் கைவிட்டுவிட்டனர். இதைத் தொடர்ந்து டெல்லி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாக்பூரில் மே மாதம் 15 ம் திகதியும் பெங்களூருவில் 29 ம் திகதியும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
