Thursday, April 21, 2011
நடிகை ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன். இவரது அண்ணன் சதீஷ் மேனன். இவர் தனது மனைவி ஆஷா பணிக்கரை விவாகரத்து செய்து விட்டார்.
இவர்களுக்கு 23 வயதில் மன நலம் குன்றிய உதய் என்ற மகன் இருக்கிறான். இவரை சதீஷ் மேனன் தனது பராமரிப்பில் வைத்துள்ளார். ஆஷா பணிக்கர் எழும்பூரில் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், ஆஷா பணிக்கர் தனது மகனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும், பராமரிப்புச் செலவுக்காக பணம் தர வேண்டும் என்று கேட்டும் சதீஷ் மேனன், சுரேஷ் மேனன் மற்றும் நடிகை ரேவதி ஆகியோருக்கு தனது வக்கீல் தினேஷ் ராஜ்குமார் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் ” எனது மகனை சதீஷ் மேனன் சரியாக கவனிக்கவில்லை. அவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. படிப்பையும் நிறுத்தி விட்டனர். எனது மகனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.
மூதாதையர் சொத்தை வங்கியில் அடமானம் வைத்து தான் சதீஷ் மேனன் தொழில் செய்தார். தொழில் நஷ்டம் ஏற்பட்டு சொத்தை வங்கி ஏலத்தில் விட்டபோது எனது மகன் உதய்க்கு பங்கு தரவில்லை. மூதாதையர் சொத்தில் பங்கு தர நடிகை ரேவதியும் அவரது கணவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
எனது மகன் பெயரில் நாலரை கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அவனது பெயரில் ஒன்றைரை கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஃபிளாட்டும் ஒரு காரும் வாங்கித் தர வேண்டும் ‘என்று கூறி உள்ளார்.
எனது மகன் பெயரில் நாலரை கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அவனது பெயரில் ஒன்றைரை கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஃபிளாட்டும் ஒரு காரும் வாங்கித் தர வேண்டும் ‘என்று கூறி உள்ளார்.