Monday, July 11, 2011
போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க, சமீப காலமாக ஹீரோக்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ‘சிங்கம்’ படத்தில் சூர்யா நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே கேரக்டரை இந்தியில் அஜய்தேவ்கன் நடித்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘சிறுத்தை’ படத்தில் அவர் ஏற்ற போலீஸ் வேடமும் வரவேற்பை பெற்றது. இந்த கேரக்டரை இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் செய்கிறார்.