Tuesday, June 21, 2011
நடிப்பிலும் சரி, சம்பளத்திலும் இலியானாவை அடித்து கொள்ள ஆளே இல்லை தென்னிந்திய திரையுலகில். சமீபத்தில் நடிகைகளின் சம்பள பட்டியல் வெளியானது. அதில் இலியானா தான் டாப். அவர் பெறும் சம்பளம் ரூ.1.25கோடியாம். தமிழில் "கேடி" படத்தின் மூலம் அறிமுகமான இலியானாவுக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை, இருந்தாலும் தெலுங்கில் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்போது வரை நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இலியானா, தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டிருக்கிறார். இதுதவிர பாலிவுட்டில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இலியானாவுக்கு அடுத்தபடியாக "அருந்ததீ" படம் மூலம் பிரபலமான அனுஷ்கா, தமிழ் மற்றும் இந்தியில் அசத்தி வரும் அசின், தென்னிந்தியா தவிர பாலிவுட்டிலும் நடித்த ஜெனிலியா ஆகியோர் ரூ.1கோடி சம்பளம் பெறுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவுக்கு, டாப்சி, ஹன்சிகா போன்றவர்களின் படையெடுப்பால் வாய்ப்பு குறைந்தது. இதனால் சமீபத்தில் தெலுங்குக்கு தாவிய அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது. இதனால் ரூ.70 முதல் 80லட்சம் வரை சம்பளம் பெற்று வருகிறார்.
இவர்கள் தவிர தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிற்கு புதிய வரவாக வந்திருக்கும் ஹன்சிகா மோத்வானி ரூ.30லட்சம் சம்பளம் பெறுகிறார். ஹன்சிகாவுடன் வந்த மற்றொரு நடிகையான டாப்சியும் இதே சம்பளத்தை வாங்குகிறார். அதேபோல் தெலுங்கில் மகதீரா படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார் காஜல் அகர்வால்.
படம் ஓடுகிறதோ இல்லையோ நடிகர், நடிகையரின் சம்பளம் மட்டும் எப்பவுமே டாப் ரேஞ்ச் தான். முன்னதாக கடந்த ஆண்டும் இலியானாதான், அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.