Tuesday, June 21, 2011
="அங்காடித்தெரு" படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் "அரவான்" படம் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது. "ஆல்பம்", "வெயில்", "அங்காடித்தெரு" உள்ளிட்ட ஹிட் படங்களாக கொடுத்த வசந்தபாலன் அடுத்து, "அரவான்" என்ற படத்தை இயக்கி வருகிறார். 18ம் நூற்றாண்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் மிருகம், ஈரம் படங்களின் நாயகன் ஆதி, பேராண்மை தன்ஷிகா, பசுபதி, பாலிவுட் நடிகர் கபீர் பேடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அங்காடித்தெரு படத்திற்கு பிறகு, வசந்தபாலனின் அரவான் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை, தென்காசி, ஓகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. மேலும் படத்தின் நாயகன் ஆதிக்கு இந்தபடம், நிச்சயம் தன் சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி தரும் படமாக அமையும் என்று கூறுகின்றனர்.