Tuesday, June 21, 2011
வருஷத்துக்கொரு முறை நடிகர் நடிகைகளின் சம்பளப் பட்டியல் என்று குத்துமதிப்பாக ஒரு விவரம் வெளியாவதுண்டு. இதற்கு ஆதாரம் என்ன, யார் இந்த தகவல்களைத் தந்தார்கள் என்றெல்லாம் கேட்டுவிடக் கூடாது.
கறுப்பு வெள்ளை என கலர் கலராக நடிகர் நடிகைகள் வாங்கும் தொகைகளின் விவரங்களை அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட வரையில் தொகுத்துத் தருகிறோம்.
இன்றைய தேதிக்கு நம்பர் ஒன் நடிகை என்றால் அனுஷ்காதான். அம்மணி வாங்கும் சம்பளம் ரூ 1.5 கோடியாம் தெலுங்கில். தமிழிலும் கிட்டத்தட்ட அதே தொகை கொடுக்கத் தயாராக உள்ள தயாரிப்பாளருக்கு, கால்ஷீட் தருவதில் முன்னுரிமை உண்டு!
இந்த சம்பளம் தவிர்த்து, அன்பளிப்புகள், பரிசுகளும் உண்டு. அவை கணக்கில் வராதவை!
இவருக்கு இணையாக சம்பளம் பெறும் இன்னொரு நடிகை கையகல இடுப்பழகி இலியானா. இவர் தமிழில் நடிக்க 1.75 கோடி வரை பேசி, ஷங்கருக்காக பெரிய மனது பண்ணி 1.5 கோடிக்கு ஒப்புக் கொண்டாராம்.
முன்பு த்ரிஷாவும் இதே சம்பளம்தான் வாங்கிக் கொண்டிருந்தார். இப்போது மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்கும் நிலையிலும் ரூ 1.40 கோடி வரை வாங்கிவிடுகிறாராம். சம்பள விஷயத்தை அவரது அம்மா கறாராகப் பார்த்துக் கொள்வதால் அந்த டென்ஷனே த்ரிஷாவுக்கு இல்லையாம்!
இரண்டாம் நிலையில் வரும் நடிகைகள் அசின், ஜெனிலியா மற்றும் தமன்னா. மூவருமே ஒரு கோடி பட்டியலில் உள்ளனர். சிறுத்தை வரும் வரையில் தமன்னாவின் மார்க்கெட் ஏக பிஸி. ஆனால் அந்தப் படத்துக்குப் பின் காணாமலே போய்விட்டார் தமன்னா. ஆனாலும் அவருக்கான வாய்ப்புகள் இப்போதும் வாசல் கதவைத் தட்டிக் கொண்டுதான் உள்ளன. வரவிருக்கும் வேங்கையில் அம்மணிக்கு சம்பளம் ரூ 1 கோடி என்கிறார்கள் கோலிவுட்டில்.
அசின் பாலிவுட் சீன் காட்டியே, ரூ 1 கோடி இலக்கிலிருந்து இறங்காமல் உள்ளார். ஜெனிலியா காணாமல் போகவேண்டிய நேரத்தில் கை கொடுத்து, ஒரு கோடி சம்பளமும் கொடுத்திருப்பவர் விஜய். இதில் கொடுமை என்னவென்றால், வேலாயுதம் பட நாயகி ஹன்ஸிகாவுக்கே சம்பளம் 30 லட்சம்தானாம்!
மூன்றாவது நிலையில் உள்ள நாயகிகளில் அமலா பால், ஓவியா, டாப்ஸி உள்ளிட்டோர் வருகின்றனர். இவர்களின் சம்பளம் ரூ 20 முதல் 30 லட்சம் வரை, படத்துக்கேற்ப வாங்கிக் கொள்கிறார்கள்.