Monday, 11 July 2011
சேலத்தில் 17-ந்தேதி விழா: மாணவ-மாணவிகளுக்கு விஜய் ரூ.8 லட்சம் உதவி.
Monday, July 11, 2011
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ- மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் துவங்கியுள்ளார்.
இதுபோல் சேலத்தில் வருகிற 17-ந்தேதி ஏழை மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தட்டுகள், மேஜை நாற்காலி ஆகிய பொருட்களும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் விஜய் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது., விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள மூன்று ரோடு பகுதியில் இதற்கான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.