Friday, 1 July 2011
குழந்தை பெற்றதும் ஐஸ்வர்யாராய் அழகு மேலும் கூடும்- சுஷ்மிதாசென்.
Friday, July 01, 2011
நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாகியுள்ளார். இதனால் கணவர் அபிஷேக் பச்சனும் மாமனார் அமிதாப் பச்சனும் மகிழச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிகிறது.
இந்தி நடிகை சுஷ்மிதா சென்னும் வாழ்த்தியுள்ளார். இவரும் உலக அழகி பட்டம் பெற்றவர். சுஷ்மிதா சென் கூறியதாவது:-
ஐஸ்வர்யாராய் அழகான பெண் அவரால் நமது நாட்டுக்கு நிறைய புகழ் கிடைத்துள்ளது. நாங்கள் இருவரும் உலக அழகி பட்டம் வென்றுள்ளோம். ஐஸ்வர்யாராய் தாய்மை அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை பெற்ற பின் அவருக்கு அழகு மேலும் கூடும் அழகான தாயாக விளங்குவார்.
தாய்மையாகும் பெண்கள் குழந்தையாகவே புதிய வாழ்க்கை அனுபவத்தை பெறுவார்கள். ஐஸ்வர்யா ராய் அந்த தாய்மை அனுபவத்தை அனுபவித்து வருகிறார். ஐஸ்வர்யாராய் குழந்தையை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று அபிஷேக்பச்சன் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஐஸ்வர்யாராய் கர்ப்பமானார் என்பதற்காக புதுப்படத்தில் இருந்து அவரை நீக்கியது. கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.