Wednesday, June 01, 2011
தமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம். ஏன் இந்த புலம்பல் என்று கேட்பவர்களுக்கு காரணம் இந்த படம் மைதானம்.தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் பட்ஜெட். தேவையில்லாமல் பல லட்சம் கோடிகளை கொட்டிவிட்டு எடுக்க முடியாமல் அவஸ்தைபடுவது. சுமார் நாற்பது லட்சங்களில் வெறும் கதையை மட்டுமே நம்பி, புதியவர்களை வைத்து நார்மல் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்தால் டெக்னாலஜி என்பது ஒரு கருவி மட்டுமே. என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.
கொங்கு மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் நான்கு நண்பர்கள். கதை நாயகனான நண்பனுக்கு ஒரு தங்கை. அவளூக்கும் நண்பர்களில் ஒருவனுக்கு காதல். ஆனால் நண்பனோ நட்புக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு காதலில் மருகுகிறான். இந்த காதல் விஷயம் இன்னொரு நண்பனுக்கு அரசல் புரசலாய் தெரியும். அவனும் இந்தக் காதல் வேண்டாம் என்று கண்டிக்கிறான். ஓரு கட்டத்தில் அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயமாகிவிடுகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அவள் காணாமல் போகிறாள். பின்பு என்ன ஆனது என்பதை நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்து ஆதரவு கொடுங்கள்.
டெக்னிக்கலாய் பார்த்தால் டிஜிட்டல் ஹெச் டிவி கேமரா, அதிகமாய் லைட்டுகள் கிடையாது, இயற்கையாய் கிடைத்த வெளிச்சத்தில்தான் முக்கால்வாசி படத்தை எடுத்திருக்கிறார்கள். கதை நாயகர்களாய் நான்கு உதவி இயக்குனர்கள். தெரிந்த முகமென்றால் தங்கையாக வரும் கதாநாயகியும், அவளுடய பெற்றோர்களாக வரும் இயக்குனர் அகத்தியனும், என்னுயிர் தோழன் ரமாவும்தான்.
நான்கு பேரில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிப்பவரின் நடிப்பு ஓகே. மற்றவர்கள் எல்லாம் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணாக வருபவரின் நடிப்பும் ஓகே. அகத்தியனின் நடிப்பு ஆங்காங்கே கொஞ்சம் மெலோட்ராமவாக இருந்தாலும் தேவையாகயிருப்பதால் ஒத்துக் கொள்ள முடிகிறது. இயக்குனர் இதுவரை யாரிடம் வேலை செய்தது இல்லையாம். முதல் பாதி திரைக்கதையில் கேரக்டர் எஸ்டாபிளிஷ்மெண்டுக்காக மெனகெட்டது சுறுசுறுப்பை குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் திருவிழா கிடையாது, தண்ணியை போட்டு விட்டு பிகர்களை தேடுவது கிடையாது. குத்து பாட்டு கிடையாது போன்ற பல கிடையாதுகள் படத்தில் இருக்கிறது.
முதல் பாதியில் தங்கையை காணவில்லை என்றதும் நண்பர்களுடன் தேடும் காட்சி அநியாய நீளம். காணாமல் போன இம்பாக்டையே கெடுத்துவிடுகிறது. அது மட்டுமில்லாமல். படத்தில் பைக் ஸ்டார்ட் பண்ணும் காட்சி என்றால் வண்டியை வெளியே எடுத்து நிறுத்தி ஸ்டார்ட் செய்வது வரை காட்டி விட்டு, பின்பு போன இடத்தில் திரும்பவும் ஸ்டார்ட் செய்வது வரை காட்டுவதும், காட்சிகள் நீளமாய் இருப்பதும் படத்திற்கு பெரிய மைனஸ். நல்ல எடிட்டர் நிச்சயமாய் உதவியிருக்க முடியும்.

இதையெல்லாம் சரி செய்வது போல படத்தின் இரண்டாவது பாதி விறுவிறுவென கொண்டு போயிருக்கிறார்கள். இயக்குனர் தயாரிப்பாளர் சக்திவேலுக்கு கொஞ்சம் பணமும், நல்ல ஆர்டிஸ்டுகளும் கிடைத்தால் ஒரு நல்ல படத்தை தருவார் என்று புரிகிறது.
மைதானம்- 50/50