மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் இந்த வருடம் பிளஸ் 2 முடித்துவிட்டு, சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்�னிகேஷன் படிக்க உள்ளார். முதல் மகன் பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தாலும், ஏனோ அந்த ஆசையை துறந்து இப்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இளைய மகனோ சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார். இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் விஜயகாந்தும், பிரேமலதாவும், சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்கள். சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விம்புகிறார்கள். இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீசுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல கதை கிடைத்ததும் சண்முக பாண்டியனின் புதிய படத்துக்கான பூஜை நடைபெறும் என தெரிகிறது. சினிமாவில் போராடி ஜெயித்த விஜயகாந்த், அரசியலிலும் போராடி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். அவரைப்போலவே மகன் சண்முக பாண்டியனும் சினிமாவில் ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். |