Thursday, June 16, 2011
நடிகையும், எம்.எல்.ஏ.,வுமான ஜெயசுதா திடீர் உடலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1970-80களில் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெயசுதா. தெலுங்கு தவிர தமிழ், மலையாளம் மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கும் ஜெயசுதா, பின்னர் அரசியலில் சேர்ந்தார். தற்போது ஆந்திராவின் செகந்திராபாத் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருக்கிறார். அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் ஜெயசுதாக்கு திடீர் உடலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயசுதாவை, பரிசோதித்த டாக்டர்கள் அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஒருவாரத்திற்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு டாக்டர் அறிவுறுத்தியுள்ளனர்.