அழகி படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு தொடர்ந்து கௌதம் மேனனின் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படமும் இரண்டாம் பாகத்திற்கு தயாராக உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் - பாலசந்தர் உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்த காதல் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. தற்போது ஜீவா வைத்து படம் இயக்கும் திட்டமிட்டிருக்கும் கௌதம், அந்த படம் முடிந்த பிறகு விடிவி இரண்டாம் பாகத்தை இயக்கலாம் என தெரிகிறது. சிம்புவும், த்ரிஷாவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதால் விரைவில் விடிவி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம்.