Saturday, June 04, 2011
யுனிக் புரொடக்ஷன்ஸ் சார்பில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படத்தை சோனா தயாரிக்கிறார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழில் ஒரே மாதிரி கேரக்டர் வந்ததால், நடிக்கவில்லை. மலையாளத்தில் ‘மிலி’ என்ற படத்தில் நடிக்கிறேன். ‘மங்காத்தா’ ரிலீசுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படத்தை தயாரிக்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஹீரோ தேர்வு நடக்கிறது. பிரேம்ஜி நடிக்கும், ‘பாக்யராஜ் 2010’ படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. என் வாழ்க்கையில் நடந்த கசப்பான, வேதனையான, சந்தோஷமான பல சம்பவங்களை மையமாக வைத்து படம் தயாரிக்கிறேன். குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், இப்போதுள்ள கெட்டப் என, மூன்று ஹீரோயின்கள் உண்டு. இப்போதுள்ள தோற்றத்தில் நான் நடிக்கிறேன். என் வாழ்க்கையை படமாக உருவாக்க அப்படி என்ன அவசியம் என்று கேட்கலாம். அதற்கு அவசியம் இருக்கிறது. என் முதுகில் குத்தியவர்களை, எனக்கு துரோகம் செய்தவர்களை அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள், இப்படத்தின் கேரக்டர்களாக உலா வருவார்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவோ, தாக்கவோ மாட்டேன்.