விவகாரத்துக்கு சம்மதிக்க முடியாது என்று மல்லுக்கட்ட ஆரம்பித்த மனைவி ரமலத் வெயிட்டான கொடுக்கல் வாங்கலுக்கு பிறகு தான் சம்மதித்தார் என்பதும், இந்த விடயத்தில் இன்னும் மீதி இருந்து வருகின்றன என்பதும் அறியாதது அல்ல.பிரபுதேவாவுக்கு வந்திருக்கும் தற்போதைய பிரச்சினை ரொம்பவே சிக்கலானது. நயன்தாரா தீவிரமான ரோமன் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். ஆகஸ்ட்டுக்கு பிறகு திருமணத்தை வைத் துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கும் நயன்தாரா குடும்பம் ஒரு வேண்டுகோள் வைக்கிறதாம் மாஸ்டருக்கு. நீங்கள் மதம் மாறி ஞான ஸ்நானம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த வேண்டுகோள். இதை எதிர்பார்க்காத பிரபுதேவா, என்ன இப்படியெல்லாம் சொல்றாங்க என்று நயன்தாராவிடம் புலம்பியதாகவும் தகவல்கள் கசிகின்றன. தனது வருங்கால கணவருக்காக பெற்றோரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. ரமலத்தை லதாவாக்கிய பிரபுதேவா, தன்னை எட்வர்ட்டாகவோ ஆன்ட்டனியாகவோ மாற்றிக் கொள்ள மட்டும் தயக்கம் காட்டுவதேன்?. |