Sunday, June 05, 2011
நியூமராலஜிப்படி தன்னுடைய பெயரை மாற்றியுள்ளதால் இனிமேல் யாரும் என்னை மேகா நாயர் என்று அழைக்காதீர்கள், மேக்னா நாயர் என்று கூப்பிடுங்கள் என்று கூறுகிறார் நடிகை மேகா சாரி, மேக்னா நாயர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் நாயகி மேகா நாயர், முதல்படமான தங்கம் படத்தில், கவர்ச்சியை காட்டி தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பை பெற்று விடலாம் என்று நடித்தார். ஆனால் அவரது கவர்ச்சி எடுபடவில்லை. இதனால் சிலகாலம் காணாமல் போய் இருந்த மேகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது தமிழில் காதலிச்சுபார், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக நெல்லை சந்திப்பு படத்தில் இவருக்கு சரியான கேரக்டராம். கூடவே அந்த கேரக்டருடன் சேர்த்து கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறாராம்.
இந்நிலையில் யாரோ சிலர் மேகா நாயரிடம் தங்களை பெயரை மாற்றினால் நன்றாக இருக்கும் என்றும் சொல்ல, நியூமராலஜிஸ்ட்டுகளிடன் ஆலோசனைப்படி தன்னுடைய பெயரான மேகா நாயர் என்பதை மேக்னா நாயர் என்று மாற்றி வைத்திருக்கிறாராம். கவர்ச்சி தான் எடுபடவில்லை, பெயரை மாற்றியதன் மூலமாவது, மேக்னா நாயருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்குமா...? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.