
இதனால் ஆத்திர மடைந்த அவர் புகைப்படக்காரர்களிடம் கோபப் பட்டதாக செய்திகள் வெளியானது. ஒரு போட்டோ கிராபரை அருகில் அழைத்து அவர் எடுத்திருந்த படங்களை காட்டச் சொன்னதாகவும் அதில் கவர்ச்சியாக இருந்த தனது படங்களை அழிக்கச் சொல்லி ஆவேசப்பட்டதாகவும் தகவல் பரவியது.
பொது நிகழ்ச்சிகளுக்கு இது போல் அரைகுறை ஆடையில் வந்தால் படம் எடுக்கத்தான் செய்வோம் என்று அந்த போட்டோ கிராபர் பதிலடி கொடுத்தாராம்.
இந்த செய்திகள் உண்மையா என்று ஸ்ரேயாவிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-
என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு உள்ளன. மக்களுக்கு நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று தெரியும். என்னை காரணம் இல்லாமல் சங்கடப்படுத்துகிறார்கள். பொது நிகழ்ச்சிகளில் இது போல் ஒழுக்க கேடாக நான் நடந்து கொள்ள மாட்டேன் என்றார்.