Friday, June 03, 2011
நீண்டஇடைவெளிக்கு பின்னர் பத்மஸ்ரீ ஷோபனா, சிம்புவின் "போடா போடி" படத்தில் நடிக்கிறார். 1980களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஷோபனா. பரதநாட்டிய கலைஞரான இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி, பரத நாட்டியத்தில் ஈடுபட்டு இருக்கும் ஷோபனா,நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க இருக்கிறார். "வானம்" படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் "போடா போடி"யில், படத்தின் நாயகி வரலெட்சுமியின் நடன குருவாக ஷோபனா நடிக்கிறார்.
நீண்டஇடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் ஷோபனாவிடம் இதுகுறித்த கேட்டபோது, படத்தில் என்னுடைய ரோல் மிகவும் பிடித்து இருந்ததாலும், ஹீரோயினுக்கு நடன குருவாக என்னுடைய கேரக்டர் அமைந்திருந்ததாலும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறுகிறார். தற்போது "போடா போடி" படத்தின் சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இங்கு சூட்டிங் முடிந்த பிறகு சிம்பு-வரலெட்சுமி சம்பந்தப்பட்ட டூயட் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்க திட்டமிட்டு இருக்கின்றனர். போடா போடி படத்தை புதுமுக இயக்குநர் விக்னேஷ் சிவா இயக்குகிறார், தரண் இசையமைக்கிறார். ஜெமினி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆகஸ்ட்டில் திரைக்கு வர இருக்கிறது.