Wednesday, July 13, 2011
அரவான் சூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த அனுபவங்களை டைரக்டர் வசந்தபாலன் உருக்கமாக கூறியிருக்கிறார். அங்காடித் தெரு வெற்றிக்குப் பிறகு டைரக்டர் வசந்தபாலன் இயக்கி வரும் புதிய படம் அரவான்.
18ம் நூற்றாண்டு கதையான இப்படத்தின் சூட்டிங் 95 சதவீதம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார் வசந்தபாலன். நீண்ட நெடிய படப்பிடிப்புக்கு பிறகு சென்னை திரும்பியிருக்கும் அவர் கூறுகையில், விதவிதமான புதிய அரணையின் வாசனைகள், மயக்கங்கள் தீரா பகல்கள், விடியா இரவுகள், உச்சம் தொட்ட ரத்த அழுத்தங்கள், கோணங்களில் பிடிப்பட்ட புதிய அழகுகள், உலகின் அத்தனை தொடர்புகளையும் அறுத்து விட்டு, தொடர்பு எல்லைக்கு வெளியே, வனங்களில் புதிய பிரதேசங்களில் அரவானின் 95 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தினமும் படப்பிடிப்பில் புதிய ரத்தத்துளியை பார்க்காமல் படப்பிடிப்பு முடியாது. வெற்றுக்கால்களுடன் நடந்த 18ம் நூற்றாண்டு மனிதர்களை கண்முன் நிறுத்த பிரம்மப் பிரயத்தனம் செய்தாகிவிட்டது. படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
வரலாற்றுப்படம் எத்தனை பெரும் வலியென உடல் உலர்ந்து போய் உணர்த்தியது, என்னுடைய உதவி இயக்குனர்கள் தங்கள் ரத்தத்தை படமெங்கும் வியர்வையாக சிந்தியிருக்கின்றனர். தயாரிப்பாளர் சிவா, எத்தனை ஆவேசத்தோடு, அன்போடு, ரசனையோடு, ஆசையாய் இந்த கனவை வடிவமாக்குகிறார். அத்தனை அழகோடு சுவாரஸ்யமாக கம்பீரமாக வளர்ந்து நிற்கிறான் அரவான். இயற்கையின் அத்தனை பூதங்களும் இடையறாது துரத்தியடித்தப் போதும், அதனோடு போட்டி போட்டுக் கொண்டும், போட்டி போடமுடியாமல் மௌனமாகி நின்றும் அரவானை வளர்த்தெடுத்தோம், என்றார்.