Friday, July 01, 2011
பொதுவாக நடிக்க வந்து கொஞ்ச காலம் சம்பாதித்த பிறகு, சமூக அக்கறை காட்டுவார்கள் நடிகைகள். இவர்களில் ப்ரியா ஆனந்த் கொஞ்சம் விதிவிலக்கு. நடிக்க வந்து ஓரிரு ஆண்டுகளுக்குள் அவர் தனது கவனத்தை குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
வாமனன், புகைப்படம், சமீபத்தில் ரிலீசான 180 ஆகிய தமிழ்ப் படங்களிலும், லீடர் உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார் ப்ரியா.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக சேவையே தனது பிரதான நோக்கம் என்கிறார் ப்ரியா. கல்வி கற்கும் வயதில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது பின்னாளில் பள சமூகக் குற்றங்களுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதான் நாட்டின் முக்கியமான முன்னேற்றம் என நினைக்கிறேன். இது குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்த சமூக சேவை அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
சினிமா, அரசியல், விளையாட்டு ஆகிய துறைகளை சார்ந்தவர்கள் இப்பணிகளில் ஈடுபடும் போது, நிறைய பேருக்கு இது போன்று பணிகளில் ஆர்வம் வரும். குறிப்பாக நடிகைகள் சமூக பணிகளில் ஈடுபட வேண்டும் என்கிறார் ப்ரியா.
சமீபத்தில் இவர் நடித்த 180 படத்தின் வெளியீட்டையொட்டி, ரத்ததானம் செய்தனர் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர். இந்த முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்ய முன்வந்தார் ப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.