ரொமான்ஸ் ஹீரோவாக மாறி இருக்கும் ஜெயம் ரவிக்கு புதிதாக இணையதளம் ஒன்று உருவாகி உள்ளது.முற்றிலும் மற்ற ஹீரோக்களில் இருந்து மாறுபட்ட இணையதளமாக ஜெயம் ரவியின் தளமாக இருக்கும்.இதில் ஜெயம் ரவி, மற்ற தமிழ் ஹீரோக்களில் இருந்து வித்தியாசப்படுகிறார். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுகிழமை அவரே அவரது இணையதளத்தில் அமர்ந்து அன்று ஒருநாள் முழுதும் ஒவ்வொரு ரசிகர்களுடனும் நேரடியாக அரட்டையில் ஈடுபடுகிறார்.அவரது நிறை குறைகளையும் ஆராய்கிறார்கள். இந்த இணையதளம் இன்னும் ஓரிரு நாளில் வெளிவர இருக்கிறது.