இவர் பிறமொழிகளில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்யவும், அதே படத்தின் இயக்குநரையும் தமிழிலேயே இயக்க வைக்க வேண்டும் என்ற தந்திரத்தை பின்பற்றி தனக்கான கதாநாயகி வாய்ப்பையும் பிடித்துக்கொள்கிறார்.
இவ்வளவு தந்திரசாலியான அனுஷ்காவையே, கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் கொந்தளிக்க வைத்துள்ளார். தெலுங்கில் அனுஷ்காவிற்கு கிடைக்க இருந்த வாய்ப்பை கடைசி நேரத்தில் ஸ்ருதிஹாசன் தட்டிச் சென்று விட்டார். தான் இவ்வளவு தெளிவாக இருக்கும் போதே நடந்து விட்ட இந்த குழப்பம் அவரை ரொம்பவே பாதித்து விட்டதாம். இந்தக் காலத்தில் யாரையும் நம்பமுடியவில்லை. நான் கூடிய சீக்கிரத்தில் யார் என்று காட்டுகிறேன் பார் என்று தன் நட்பு வட்டாரங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. |