Tuesday, May 10, 2011
நயன்தாரா-பிரபுதேவா திருமணம் ஜூலையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதுப்படங்களை நயன்தாரா ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தமிழிலும் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்துக்குப் பின் நடிக்காமல் ஒதுங்கினார். பிறமொழிகளிலும் நடிக்கவில்லை. நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டதாக கூறப்பட்டது.
ஆனால் திடீரென்று தெலுங்கில் தயாராகும் “ராம ராஜ்ஜியம்” படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ராமாயண கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.
இதில் ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணாவும், வால்மீகி முனிவர் வேடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராகவும், லட்சுமணன் வேடத்தில் ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர்.
புராண கதை என்பதால் இப்படத்தில் நயன்தாரா நடிக்க பிரபுதேவா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா சீதையாக நடிக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தெலுங்கில் தயாராகும் ராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. பிரபுதேவா திருமணமானவர். மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர். அவர் வாழ்க்கையில் புகுந்து ரம்லத்துக்கு துரோகம் செய்துள்ளார் நயன்தாரா.
எனவே சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு தகுதி இல்லை. அவரை படத்தில் இருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் படத்தை திரையிடவிடாமல் தடுப்போம். ஆந்திர மக்களும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளா