தமிழ் சினிமாவில் டைரக்டர்கள் ஹீரோ ஆவதும், ஹீரோக்கள் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் ஆவதும் காலம் காலமாக நடந்து வரும் சங்கதிதான். அதிலும் சமீப காலமாக நடிகர் அவதாரம் எடுக்கும் டைரக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பிட்ட ஒரு நடிகரிடம் கால்ஷீட் கேட்டு, அவர் தர மறுத்தால், அந்த படத்தில் தானே ஹீரோ ஆகி, ஒரு சிலர் வெற்றியும், ஒரு சிலர் படுதோல்வியையும் சந்தித்திருக்கிறார்கள். அந்த புதிய கலாச்சாரத்தின்படி புதிதாக நடிகர் அவதாரம் எடுத்திருப்பவர் டைரக்டர் செல்வமணி. அவர் இயக்கிவரும் புதிய படமான அகிலாவில் போராளியாக நடிக்கிறார் செல்வமணி.
இதேபோல், மனதை திருடிவிட்டாய், ஒரு பொண்ணு ஒரு பையன் படங்களின் இயக்குநர் நாராயணமூர்த்தி கொள்ளைகாரன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.நீங்களும் நடிக்க கிளம்பிட்டிங்களா....!