Sunday, June 12, 2011
ஹோட்டல், பார், பப், விஐபி கிளப் என பல தொழில்களில் சிறந்து விளங்கும் பிரபல தொழிலதிபரும் நடிகருமான ஆர்.கே.வை பிச்சைக்காரனுக்கு, பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு வேடமிட்டு நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் பாலா. சென்னையில் நிருபர்களை சந்தித்த நடிகர் ஆர்.கே., அவன் இவன் படத்தில் தான் ஏற்றிருக்கும் வேடம் இதுதான் என்று கூறி சில ஸ்டில்களை வெளியிட்டார். வழக்கமான பாலா படத்தில் இருக்கும் அதே கோர முகம், புழுதி படர்ந்த தலைமுடி; தாடி என அக்மார்க் பிச்சைக்காரன் போன்ற தோற்றம் அது.