

இதுகுறித்து விமலாராமனின் உதவியாளர் கூறியதாவது, விமலா ராமன் இந்தியில் நடிக்க போவது உண்மைதான். டைரக்டர் ஹாட் அலி அக்பர் இயக்கும் படத்தில், கோவிந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. விமலா ராமனுடன் சுனில் ஷெட்டி, ஆர்யா அக்பர், முகுதா கோஸ், முகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் ஒரு முழுநீள காமெடி படமாக இருக்கும். இப்படத்தின் சூட்டிங்கிற்காக விரைவில் மும்பை செல்ல இருக்கிறார் விமலா ராமன். தெலுங்கு சினிமாவில் விமலா ராமன் எப்படி அசத்தினாரோ, அதேபோல் இந்தி சினிமாவிலும் நிச்சயம் அவர் அசத்துவார் என்றார்.