Wednesday, June 29, 2011
அஜீத் மனசு வைத்தால் "மங்காத்தா" ஆடியோவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் துரை தயாநிதி அழகிரி. க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், துரை தயாநிதி தயாரித்து வரும் அஜீத்தின் 50வது படம் "மங்காத்தா". இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, லக்ஷமிராய், வைபவ், பிரேம்ஜி அமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் மங்காத்தா படத்தின் ஆடியோ எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
அதேசமயம், சமீபத்தில் அஜீத் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் சோர்ந்து போய் உள்ளனார். இதனால் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மங்காத்தா ஆடியோவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி. ஆனால் இதற்கு அஜீத் சம்மதிக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. பொதுவாக இதுபோன்ற விழாக்கள் என்றாலே அஜீத்திற்கு அலர்ஜி. சினிமா சம்மந்தப்பட் எந்த விழாக்களிலும் அவர் தலைகாட்டமாட்டார். கடந்த ஆட்சியில் கூட முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில், தன்னை கட்டாயாப்படுத்தி இந்தவிழாவிற்கு வரவழைத்தாக மேடையில் பகிரங்கமாக பேசினார் அஜீத்.
தன்னுடைய பட விழாக்களையே ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்தும் அஜீத், இப்போது மங்காத்தா படத்தின் ஆடியோ ரிலீசை பிரமாண்டமாய் நடத்த சம்மதிப்பாரா...? என்ற ஆவல் எழுந்துள்ளது.