Wednesday, June 29, 2011
என்னை முதல்வராக பார்க்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே இனி நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தெலுங்கு சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. தமிழிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மெகா ஸ்டாராக இருந்தவர் கடந்த 2009ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 18 சீட்டுகளை பெற்றார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், தன்னை காங்கிரஸ் கட்சியோடு இணைத்து கொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு 150வது படத்தில் சிரஞ்சீவி நடிக்கபோவதாக அவரது மகன் ராம்சரண் தேஜா கூறியிருந்தார். இந்நிலையில் நான் சினிமாவை விட்டே விலகுவதாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறேன். இதனால் மீண்டும் நடிப்பதற்கு எல்லாம் நேரம் இல்லை. என் இடத்தை என் மகன் ராம்சரண் நிரப்புவார். அடுத்த படத்தில் நீங்கள் அரசியல்வாதியாக, முதல்வராக நடிப்பதாக இருந்ததாக கூறப்பட்டதே என்று கேட்டதற்கு, "ஆந்திர மக்களுக்கு என்னை நிஜத்தில், இந்த மாநில முதல்வராகவே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர். எனவே, இனி அதற்கான வேலைகளில் இறங்குவேன்," என்றார்.