பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே அறிவித்த நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமா உலகிலிருந்து விடைபெற்றார். நடிகர் சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர் தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத், ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம் ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதனால் நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா-ரமலத்துக்கும் விரைவில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கையோடு, நயனை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதேசமயம் தெலுங்கில் முன்புகமிட் ஆகியிருந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார். "ஸ்ரீராமராஜ்யம்" படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து நடித்து வந்த நயன், இந்தபடத்திற்காக, பிரபுதேவாவை பார்க்கமாலும், அசைவ உணவுகளை தவிர்த்தும் நடித்து வந்தார்.இந்நிலையில் நேற்று இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான் சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங் முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல் கூறினார். திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன், அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.பின்னர் படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கைகடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு மேக்கப்மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார். அதன்பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து விடைபெற்றார் நயன்தாரா.