Sunday, June 12, 2011
புதிய படமொன்றில் டி.ராஜேந்தரின் வீராச்சாமி படத்தினை காப்பியடித்து நடித்திருக்கிறார் நடிகர் ஜித்தன் ரமேஷ். டி.ஆரின் அனுமதியோடு சில காட்சிகளை காப்பியடித்திருந்தாலும் திரைக்கு வரும்போது அது டி.ஆர். ரசிகர்களை உஷ்ணப்படுத்தும் என்றே தெரிகிறது. நடிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவுக்குத்தான் ஜித்தன் ரமேசின் நடிப்புத் திறமை. அவர் நடிப்பில் வெளியான ஒருசில படங்களும் கையை சுட்டு விட்டாலும், அடுத்தடுத்து நடிப்பில் (?) அதிக அக்கரை காட்டுகிறார் ரமேஷ். தற்போது பிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற பெயரில் உருவாகியிருக்கும் படத்தில் நடித்துள்ள ரமேஷ், அப்படத்தில் டி.ஆரை இமிடேட் செய்து நடித்துள்ளாராம்.
ஒரு நடிகரை கிண்டலடிப்பது வேறு ; காப்பியடிப்பது வேறு. வசனத்திற்கு ஏற்ற எக்ஸ்பிரஷனை முகத்தில் காட்டத் தெரியாத ரமேஷ், அடுக்குமொழியால் தியேட்டரையே அதிர வைக்கும் டி.ஆரைப் போல நடித்தால் என்னவாகும்? அதை டி.ஆரின் ரசிகர்கள் காப்பி என எடுத்துக் கொள்வார்களா? கிண்டல் என நினைப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்னொரு புறம்... படம் வெளியாகட்டும்; பார்த்துக்கலாம் என்று கூறி ஜித்தனை சீண்ட தயாராகி வருகிறது டி.ஆர். ரசிகர் கூட்டம்.