Saturday, June 11, 2011
ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகர் விஷாலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக இப்போது போராடுகிறார்கள். ஆனால் நான் பல வருடங்களுக்கு முன்பே “சிவப்பதிகாரம்” படத்தில் இதை சொல்லி விட்டேன். அப்படத்தில் ஊழலை ஒழிக்க சில தீர்வுகள் சொல்லப்பட்டன. அதாவது ஒவ்வொரு வேலைக்கும் கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் எம்.எல்.ஏ.க் களுக்கு மட்டும் கல்வித்தகுதி இல்லாத நிலைமை உள்ளது. படிப்பறிவு இல்லாதவர்கள் கூட அரசியல் மூலம் பதவிக்கு வந்து விடுகின்றனர். பி.ஏ., பி.எஸ்.சி. என அடிப்படை கல்வி அறிவு பெற்றவர்கள் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் ஆக வேண்டும். அப்போது தான் ஊழல் குறையும்.
நானும் ஆர்யாவும் இணைந்து நடித்த “அவன் இவன்” படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் மாறு கண்ணுடன் வித்தியாசமான வேடத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன். எழுபது அடி உயர மரத்தில் ஏறி கீழே குதிப்பது போன்ற காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்தேன்.
மாறு கண்ணுடன் நடித்ததை கின்னஸ் சாதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். இதில் எனக்கு விருது கிடைக்கும் என்று இயக்குனர் பாலா கூறினார். அவர் அப்படி சொன்னதே விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாலா படம் என எதிர்பார்த்து ரசிகர்கள் வரலாம். கமர்ஷியல் எண்டர்டெய்ன்மென்டாக உருவாகி உள்ளது.