இருபது வருடங்களுக்கு பிறகு, "இது தாண்டா பொலிஸ் - 2" படத்தின் மூலமாக புது உற்சாகத்தை பெற்றுள்ளார் டொக்டர் ராஜசேகர். இந்த படத்துக்காக ஜீவிதா உத்தரவு போட்டு டொக்டரை இயக்கியுள்ளார். அதிரடி சண்டைக்காட்சியை படமாக்கும் போது ராஜசேகருக்கு அடிபட்டதும் துடி துடித்து போனார். பதினைந்து நாட்களாக வேகமாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
சிறைச்சாலை செட் போட்டு, ஆக்ஸன் காட்சியை பரபரப்பாக படத்தை எடுத்துள்ளார். வில்லனோடு ராஜசேகர் மோதும் காட்சியை நன்றாக எடுப்பதில் ஜீவிதா ஆர்வம் காட்டினார். இதற்காக ரீடேக் போனார். காயங்களையும் பொருட்படுத்தாமல் நடிப்பதில் குறியாக இருந்தார் டொக்டர் ராஜசேகர். "இது தாண்டா போலிஸ் - 2" படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கூடி, பாக்ஸ் ஓபிஸ் வசூல் குவியும் என படக்குழு எதிர்பார்க்கிறது. |