Wednesday, May 11, 2011
மராத்தி படங்களிலும் இந்தி சீரியல்களிலும் தலை காட்டிய பல்லவி சுபாஸ் கொலிவுட்டுக்கு வந்துள்ளார்.ஆக்ஸன் கிங் அர்ஜுன் நாயகனாக நடிக்கும் "ஓம்" படத்தில் அவருடன் இணைந்து நாயகியாக நடிக்கிறார் பல்லவி.அர்ஜுன் நடிப்பில் "ஒற்றன்" படத்தை இயக்கிய இளங்கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளரும் டைரக்டருமான சக்தி சிதம்பரம் இப்படத்தை தயாரிக்கிறார்.
எனக்கு தமிழ் படங்களை ரசித்து பார்ப்பது மிகவும் பிடிக்கும். சூர்யாவை நினைத்து சுற்றும் விசிறி நான். தியேட்டரில் நான் பார்த்த சூர்யாவின் படம் சிங்கம். சூர்யாவோடு இணைந்து நடிக்கும் திட்டத்தோடு தமிழ் சினிமா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளேன்.
விளம்பரங்களில் என்னை பார்த்த "ஓம்" படக்குழு அழைத்தது. அர்ஜுன் உடன் நடிப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்க வில்லை.
தமிழ் படங்களில் நடித்த பிறகு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் விரும்பும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் பாலிவுட் படத்தில் நடிப்பதில் எனக்கு தயக்கமில்லை. தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நான், நாயகன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நாயகியாக, கல்லுரி மானாக "ஓம்" படத்தில் நடிக்கிறேன் என்று பல்லவி கூறியுள்ளாராம்.