Wednesday, May 11, 2011
இந்த குறும்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.சர்வதேச குறும்படம் ஒன்றுக்கு இளையராஜா இசையமைத்துள்ளது இதுவே முதல் முறை. பியானோ,வயலின் போன்ற இசை கருவிகளை பயன்படுத்தி சர்வதேச தரத்தில் பின்னணி இசை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் இசை குறும்படத்தின் தன்மையையும்,உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளதாக இயக்குனர் பிரபாகரன் நன்றியோடு கூறுகிறார்.
மைனா படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.கோடைக்காணலில் வசித்து வரும் ஆங்கில அமெரிக்கரான மார்க் ஆந்தோரபஸ் ஃபாதர் டேனியலாக முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.மைனா படத்தில் நாயகியின் சிறுவயது தோற்றத்தில் நடித்த சிறுமி அர்ச்சனா முல்லி என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த குறும்படம் புகழ்பெற கேன்ஸ் திரைப்பட விழா 20011ல் பங்கேற்க தேர்வாகியுள்ளது.மேலும் மாஸ்கோ திரைப்பட விழா,சிக்காகோ திரைப்பட விழா,ஆர்லான்டோ திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச விழாக்களிலும் இந்த குறும்படம் பங்கேற்க உள்ளது.
பிரபாகரன் கடந்த 15 ஆண்டுகளாக 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.டிவி நிகழ்ச்சி மற்றும் விளம்பர படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.தமிழக அரசின் விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.