Wednesday, May 11, 2011
விஜய் ஜோடியாக "நண்பன்" படத்தில் நடிப்பவர் இலியானா.இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். விக்ரம் நடிக்கும் “தெய்வத் திருமகள்” படத்திலும் இலியானாவை ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு ரூ. 36 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தனர்.
ஆனால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை. “தெய்வத்திருமகள்” படத்துக்கு ஒதுக்கிய தேதிகளை “நண்பன்” படத்துக்கு ஒதுக்கி கொடுத்து விட்டதாக தயாரிப்பாளர் மோகன் நடராஜன் கூறினார். இதையடுத்து அப் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்ட போது கொடுக்க மறுத்து விட்டாராம். இதையடுத்து மோகன் நடராஜன் தயாரிப்பாளர் சங்கத்தில் இலியானா மீது புகார் அளித்துள்ளார். “தெய்வத் திருமகள்” படத்தில் நடிக்க இலியானா ரூ. 36 லட்சம் அட்வான்ஸ் வாங்கினார் என்றும் ஆனால் படப்பிடிப்புக்கும் போட்டோ செஷனுக்கும் அவர் வரவில்லை என்றும் புகாரில் கூறி இருந்தார்.
அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கித் தரும்படியும் வற்புறுத்தியிருந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரித்து வருகிறது. இலியா னாவிடமும் விசாரணை நடக்கிறது. “சக்தி” தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் இலியானா பங்கேற்கவில்லை என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கமும் அவர் மேல் கோபத்தில் உள்ளது. படங்களில் நடிக்க இலியானாவுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.