Sunday, July 03, 2011
அந்போது பிரபுதேவாவும், ரமலத்தும் தனித்தனி கார்களில் கோர்ட்டுக்கு வந்தனர். உள்ளே சென்றபோதும், வெளியே வந்தபோதும் பிரபுதேவா தலைகுனிந்தபடியே இருந்தார். ரமலத் கோர்ட் வளாகத்துக்குள் வந்தபோது 15 ஆண்டுகள் ஒன்றாக குடும்பம் நடத்திய கணவனிடம் இருந்து பிரியப் போகிறோமே... என்ற வருத்தம் துளியும் இல்லாமல் இருந்தார். பின்னர் பிரபுதேவாவுடன் சிரித்து பேசினார். கோர்ட்டில் ரமலத்துக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டபடி 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் கொடுப்பதற்கான ஆவணங்களை பிரபுதேவா தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ரமலத் சந்தோஷமாக காணப்பட்டார்.
ரமலத்தின் வக்கீல் பி.ஆனந்தன் அளித்த பேட்டியில், பிரபுதேவாவும், ரமலத்தும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். பிரபுதேவா வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டியது இருப்பதால் முன்கூட்டியே விசாரணை நடத்துமாறு கோர்ட்டில் மனு செய்தார். அதன்படி, இன்று விசாரணை நடத்தப்பட்டது. பிரபுதேவாவும் ரமலத்தும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். தனது குழந்தைகளின் பராமரிப்புக்காக ரமலத்திற்கு வழங்குவதாக இருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களையும் பிரபுதேவா சமர்ப்பித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது, என்றார்.
ஒப்படைக்க வேண்டிய சொத்துக்களை பிரபுதேவா ஒப்படைத்து விட்டதால் ரமலத்துடனான விவாகரத்துக்கு பிரச்னை இல்லை என்று வக்கீல்கள் பேசிக் கொண்டனர்.