ரூ.35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா - 2 படத்தின் சூட்டிங் தொடங்கியது. பழைய பில்லாவின் ரீ-மேக்காக அஜீத், நயன்தாரா, நமீதா நடிப்பில் வெளியான பில்லா படம் சக்கை போடு போட்டதையடுத்து பில்லா - 2 என்ற படத்தில் நடிக்க அஜீத் முன்வந்தார். டைரக்டர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படம் பில்லா முதல் பாகத்துக்கு முந்தைய கதையமைப்பை கொண்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் புதிய படத்தின் சூட்டிங் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அமைதியாக தொடங்கியுள்ளது. முதல் நாள் சூட்டிங்கில் ஹீரோ அஜீத், ஹீரோயின் ஹ்யூமா குரேஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பில்லா - 2 படத்தின் பட்ஜெட் ரூ.35 கோடி என முடிவு செய்திருக்கிறதாம் படத்தை தயாரிக்கும் இந்துஜா குழுமம் மற்றும் வைட் ஆங்கில் பிலிம்ஸ் நிறுவனங்கள். முதல்கட்ட சூட்டிங்கை ஐதராபாத் மற்றும் கோவாவில் நடத்த முடிவு செய்திருக்கும் படக்குழுவினர், பாடல் காட்சிகளுக்காக வழக்கம்போல வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.