Wednesday, April 20, 2011
முதலிரண்டுப் படங்களில் அழுக்கு ட்ரெஸ் அப்புறம் ஆடம்பர ட்ரெஸ் என உடையில் வித்தியாசம் காட்டியே இதுவரை காலத்தை ஓட்டிவிட்டார் கார்த்தி. இப்போது கெட்டப் மாற்றும் காலம்.
சிறுத்தைக்குப் பிறகு தேடிச் சலித்து சங்கர் தயாளின் சகுனி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் சொஸைட்டியை மாற்றும் இளைஞன் என கார்த்திக்கு சீரியஸ் ரோல். இதுவரை பார்த்த கார்த்தி வேண்டாம் கெட்டப் மாற்றலாம் என்று இயக்குனர் கூற கார்த்தியும் சின்சியராக அதற்கான பூர்வாங்க பயிற்சியில் இருக்கிறார்.
ரொம்ப வித்தியாசமான கேரக்டர் என்று சிலாகிக்கும் கார்த்தி வெளியேகூட அதிகம் வராமல் ஹோம்வொர்க்கில் இருக்கிறாராம்.