Wednesday, April 20, 2011
மலையாள படப்பிடிப்பில் இருக்கும் பாவனா கூறியதாவது: துபாயில் நடந்த ‘அரபியும் ஒட்டகமும் பி.மாதவன் நாயரும்’ ஷூட்டிங்கில், ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். மலையாளத்தில் ‘டாக்டர் லவ்’, கன்னடத்தில் ‘விஷ்ணுவர்த்தனா’ படங்களில் நடிக்கிறேன். ‘அசல்’ படத்துக்கு பிறகு தமிழில் ஏன் நடிக்கவில்லை என்கிறார்கள். இதுவரை பல கதைகள் கேட்டேன். எதுவும் திருப்தி அளிக்கவில்லை. ஹீரோயின் என்றால், நான்கு பாட்டுக்கு ஆட வேண்டும். ஹீரோவுடன் காதல் காட்சியில் நடிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதே போல் சில படங்களில் நடித்து விட்டேன். இது எனக்கே சலிப்பு ஏற்படுத்தி விட்டது. என் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தால், உடனே தமிழுக்கு வருவேன்.